தீண்டி உருவானதொரு
தீயால் தகித்து
துவளும் தாமரை தேகம்
உரசிய உதடுகளால்
எரியும் பருவம்
பெருகும் அனல் நதிகள்
தணல் அடங்கிப் பிரியும் முன்
மணல் வழி இறங்கும் நீராய்
நெற்றியில் உன் முத்தத்தால்
சொருகும் என் கண்ணில்
தெரியும் மேலும் ஓர்
இரண்டாம் உலகம் !
Be First to Comment