தினக்கூலி கிடைத்து
சிகரெட் அட்டையில் கணக்கெழுதி
அரிசியும் எதோ ஒரு மரக்காயும்
வாங்கி வந்து
சோறாக்கும் வரை..
பிள்ளைகள்
பக்கத்து கல்யாண மண்டபத்து
பாட்டு கேட்டு ஆடிக்கொள்வார்கள்
பசி மறந்து,
வயிற்றுக்கு உணவில்லாத போது
சிறிது செவிக்கு தரமுடியாமல்
காதடைத்து
Be First to Comment