மின்சார ரயிலில்
நெருக்கியமர்ந்து
ஜன்னலில் தலைமுடி
காய வைத்து
எவர்சில்வர் டப்பா இட்லி மென்று
மாதாந்திர பாஸ்
புதுப்பிக்காதது நினைத்து
நாக்கு கடித்து
பொட்டு திருத்தி
தேய்ந்த செருப்பும்
காய்ந்த கனவுடன் ஒடி
அலுவலகம் அடைந்து
சம்பள பாக்கி பற்றி
கவலையுடன் கேட்டறிந்து
போனில் மீதி பாலன்ஸ்
கவனித்துப் பின்
அன்றைய நாளுக்கான
முதல் அழைப்பை
சிரிப்புடன் தொடங்கினாள்
“சொல்லுங்க சார் !
உங்களுக்கு என்ன
பிரச்னை ? “
பிரச்னை
Published inUncategorized
அவளுக்கே பல பிரச்சனைகள் உள்ளன… அவளின் வேலையோ, பிறர் பிரச்சனையைத் தீர்ப்பது… அருமை