பச்சை விரிப்பும்
வெள்ளைக் கட்டிலும்
துணிகள் காயும்
சிறுங்கட்ட ஜன்னலும்
பெனாயில் வாடையும்
நைட்டியும் ஒற்றை மஞ்சள்கயிறும்
ரப்பர் செருப்பும்,
பெரிய வயிறு பெண்களும்
வலயும் சத்தமும் கொண்ட
அரசாங்க ஆஸ்பத்திரி
பிரசவ வார்டின்
வெளிப்புறத்தில் காய்ந்த
வெடிப்புகள் நிறைந்த
வேப்பமரத்தடியில் சிறிது
நேரம் இருக்க
நேரிடும் ஒரு ஆணால்
பின்னொரு முறை
பார்க்க முடியாது
எந்தப் பெண்ணையும்
முன்பு பார்த்த
பெண்ணைப் போலவே
Be First to Comment