குளிர்ந்த கல் தரையும்
கொடி மரமும்
துவாரபாலகரும்
சர விளக்கும்
கோபுரத்தில் வண்ணமயமாக
வாழும் அனைவரும்
நவக்கிரகங்களும் கூட
ஒரே திசையில் ஆர்வமாய்
வாசல் பார்த்திருந்தனர்,
கருநீலத் தாவணி
பிரளும் பாவாடையில்
பூக்கூடையுடன் வரும்
உன்னைப் பார்க்கலாம்
என்று ரகசியமாய்
சிரித்தபடி
Be First to Comment