செருப்பு டோக்கன்
பத்திரப்படுத்தணும்
பத்திரப்படுத்தணும்
பூக்கடையில மீதி
சில்லறை வாங்கணும்
பசங்களை ஓடாம
பாத்துக்கணும்
சிறப்பு தரிசனமா
சித்தெறும்பு தரிசனமான்னு
முடிவு பண்ணனும்
பர்ஸோ செல்போனோ
இருக்கான்னு பாத்துக்கணும்
தட்டுல போட பத்து
ரூபா அதிகமோன்னு யோசிக்கணும்
ப்ளூ சுடிதார் இங்க தானே
இருந்தான்னு தேடணும்
நெய் விளக்கை எங்க ஏத்த
சொன்னான்னு துண்டு சீட்டப்
பாக்கணும்
என்னது..
அகவல் சொல்லாம போறனா..
ஆளை உட்றா சாமீ.
very nice… this is the mindset of many in our temples/everywhere today…we are rushing around with our mind jumping from one thought to another…ரொம்ப யதார்த்தம், உங்க எண்ணங்கள்.
யதார்த்தம்
Nice one