காற்றின் களிப்பில்
காடா விளக்கொளி அசைந்திருக்க
போர்வையும் புடவையும்
ஏலம் போடுபவர் போல
சலிக்காமல்
எடுத்துப் போடுகிறேன்
என் வார்த்தைகளை
ஏதோ காரணங்களுக்காக
சில வார்த்தைகள் கோர்வையாகிச்
சேர்ந்து பார்வையாளனோடு
கிளம்பி விடுகின்றன
சேராத வார்த்தைகளை
முன்பு போல
அடுக்கி வைத்துவிடுகிறேன்
மற்றொரு இடத்தில்
மற்றொரு விளக்கெரியும்
பொழுதுக்காக.
Be First to Comment