கோவில் பூஜையில்
அரிசி மேல் படுத்தபடி சில
முதுகில் பெயர் பொறிக்க
கடற்கரையருகே
காத்திருந்தபடி சில
ஒரு பெரிய தெய்வத்தின்
பின்னாடி ஏழாவது அல்லது
எட்டாவது கையில் சில
பித்தளைப் பூண் போட்டு
இரவில் உலா வரும்
பண்டாரத்தின் கையில் சில
மாற்று மருத்துவத்தில்
பொடிக்கப்பட்டு மருந்தாகும் சில
தான் இறந்திருந்தாலும்,
பாலூட்டி
படுத்துறங்கும் குழந்தையருகே
மீதிப்பாலோடு கவிழ்ந்தபடி
வெகு சில..
சங்குகள்.
சில
Published inUncategorized
Be First to Comment