முன்னும் பின்னுமாக
படபடத்து,
பூ விட்டு பூ தாவி
பறந்துகொண்டிருந்தது
ஒரு பட்டாம்பூச்சி.
அது புழுவாக இருந்தபோது
முடியோடு தன் மேல் ஊர்ந்து
தன்னைக் காதலோடுக் கடித்த
கணங்களை எண்ணி
தகித்ததால்
கொஞ்சம் கொஞ்சமாக
பழுப்பு நிறமாக
மாறிக்கொண்டிருந்ததது
ஒரு பச்சை இலை
பழுப்பு
Published inUncategorized
Be First to Comment