பிளேடால் அறுத்து
முதல் கருஞ்சிவப்புக் குமிழ்
பார்த்திருக்கிறான்
பேனாக் கத்தியால் கீறி
சட்தையில் ரத்தம் பரப்பியிருக்கிறான்
விலா விளிம்பு வரை கத்தி
சொருகி கொப்பளிக்கும்
ரத்தம் பார்த்திருக்கிறான்
தலையை மோதி சுவரை
கருஞ்சிவப்பாக்கியிருக்கிறான்
அப்பேர்ப்பட்ட குமார்
ஆளில்லாத சாலையில்
வெட்டுப்பட்டுக் கிடந்தான்
அவனருகே அவன் கூடவே
பயணித்த அதே கருஞ்சிவப்பு
ரத்தம் உறைந்தபடி.
Be First to Comment