பன்னீர்ப்பூ தேகம் பரதம் பயில
கை வீசும்போது காற்றெல்லாம்
மருதாணிச் சிவப்பாக
கால் சலங்கையின் ஒலி அதிர்வில்
புறாக்கள் படபடக்க
ஜதிக்கு நீயாடும் நாட்டியம் பார்க்க
நின்று செல்லும் நதிக்கு ஆவல்
என் கண்கள் பழகிய
கிணற்று இருள் நீ
சலங்கையின் சத்தத்திற்கு
புறங்கையில் முத்தம் வைப்பேன்
மல்லி வைத்த உன் வாசம்
எனக்கு புலப்படாத அபிநயம்
சொல்லிடும்
ஓசைகளால் ஆன என் வாழ்வில்
பல ஆசைகள் உன் வரவால்
உன் பாவடை அசைத்த காற்று
என் சுவாசமாக
காட்டிய ஆரத்தியை கண்ணில் வைப்பாய்
என்னில் பாதுகாப்பேன்
உன் உள்ளங்கை வெப்பம்
கனவென்பது தெரியாமலே
நீ பேசவது கேட்டு காட்சிகள் செய்வேன்
பார்வை வேண்டாம் பாவை
நீ என் விரல் கோர்த்துக்கொள்
போதும்.
Be First to Comment