ஆலமரம், ஆட்டோ ஸ்டாண்டு
இளநீர் கடை என வித விதமாக
அடையாளம் காணப்பட்ட
முச்சந்தியின் பெயர் ஒரே நாளில்
மறைந்துவிட்டது
வெள்ளை வெளிச்சம் பரப்பும்
அலுமினியப் பனைமரம் போல்
உயரமான அஞ்சு விளக்கு
வைக்கப்பட்டப் பின்னர்
சந்தோஷமான விளக்கு
இரவில் கொடுத்தது
ஆளுக்கு அஞ்சு நிழல்கள்
Be First to Comment