என்னில் விரிசல் விழுந்தால்
தண்ணீர் தெளித்து வைப்பீர்
எருக்கம் மாலையும், புல்லும்
அணிவிப்பீர்
கண்ணில் விழ சந்தனம்
தெளிப்பீர்
தொலைக்காட்சி பார்த்தே
படைத்தும் தொலைப்பீர்
என் தொப்புளில் பவுன் காசு
அகற்றி ஐந்து ருபாய் நாணயம்
வைக்க மறக்க மாட்டீர்
மாலையில் அவலும் தண்ணீரும்
கொடுத்து வழியனுப்பிடுவீர்
தெரியவில்லை
பிறந்த மூன்றாம் நாளில்
கிணற்றில் தள்ளப்படும் சோகம்
வேறு ஒரு தெய்வத்துக்கு
நிகழுமாயென.
Be First to Comment