பைகள் அடுக்குவதோ,
டிக்கெட் சரி பார்ப்பதோ,
கீழ் அடுக்கு படுக்கை தகறாரோ,
வேடிக்கை பார்ப்பதோ
என்று எப்படியோ போய் விடும்
பயணிப்பவருக்கு..
கையசைக்கும் குழந்தைகளின்
சத்தமும்,
சில பெண்களின் கண்ணீரும்
ஓடி வந்து வண்டியைத்
தவற விட்டவரும்,
கொடுக்க மறந்த
தண்ணீர் பாட்டிலும்
கொண்ட நீண்ட
நடைமேடையைக்
கடக்கும் பெரும் பொறுப்பு
தனியே திரும்பும்
வழியனுப்பியவருக்கு.
Be First to Comment