வவ்வால்கள் பறந்த
பிண்ணனியில்
ஜலகண்டேஸ்வரரும்
சத்புத்ரி நாயகியும்
சண்டிகேஸ்வரரும்
எண்ணைப் பிசுக்கேறிய
கால பைரவரும்
நகராத நந்தியும்
திடுக்கிட்டு தூக்கிப் போடுவதை
தடுத்துக்கொள்ள முடியவில்லை
உபயத்தில் புதிதாக வந்த
மின்சார மேளம் ஆரம்பிக்கும்
எதிர் பாராத தருணங்களில்
Be First to Comment