அறியாத வயதில்..
வெல்லம் வைத்து
ஈக்களைச் சேர்த்து
அடித்திருக்கிறேன்
கை பம்ப்பில்
மண்ணள்ளி
போட்டிருக்கிறேன்
வடை வைத்துப்
பிடித்த எலியை
கோணியில் கட்டி
அடித்திருக்கிறேன்
எறும்பின் பாதையில்
தண்ணீர் ஊற்றியிருக்கிறேன்
அறிந்த வயதில்..
சொல்லியதேயில்லை
‘நான் யாருக்கும் எந்த
கெடுதியும் செஞ்சதில்லையே’
என்று.
One Comment