சிறு நீர் அம்புகள்,
மண்ணிற்கு ஈர முத்தம்,
காற்றில் நீரின் நடனம்,
மண்ணின் சிரிப்பாய்
நகரும் குமிழ்கள்,
இப்படி பல வரிகளுடன்
இரு பக்கம் நீர் தெறிக்க
பைக்கில் நனைந்து
என்னுள் துளிர்த்த
கவிதை வரிகள்
தடுமாறின
தார்பாய் மூடிய சிறு கடை முன்
பறக்கும் திவலைகளை
கையால் பிடித்தாடும்
குழந்தையுடன்,
சாக்கை தலையில் போர்த்தி
கிளை தாழ்த்திய மரத்தடியில்
தலை சாய்த்து கவலையுடன்
நிற்கும் இளநீர் கடைக்காரரின்
பார்வை சிரிப்பால்.
Be First to Comment