பெருமரத்தில் தடம்
பதிக்காமல் பாவும்
எறும்பின் பயணம்
குளத்தின் நீர்பரப்பைத்
தொடாமல் பரவும்
பனிப்புகை
ஆற்று மணலை
அசைக்காமல் இறங்கும்
மழை நீர்
கோயில் மணி அதிர்வில்
மெதுவாய் உதிரும்
பூவரசம்பூ
இப்படித்தான் என்னில்
நுழைந்தது உன்
நினைவுகள்
Be First to Comment