மனைவியிடம் ஃபோனில்
விசாரித்திருக்கலாம்
தன் குழந்தையின் அழுகை
போனில் கேட்டு கலங்கியிருக்கலாம்
பின்னர் தானே புகைப்படம் எடுத்துச்
சிரித்திருக்கலாம்
ஊர் திரும்பும் நாள் கணக்கு
எண்ணியிருக்கலாம்
பொம்மை வாங்கும் பட்டியல்
மடித்து வைத்திருக்கலாம்
யூரோவால் ரூபாயை
பெருக்கிக் கொண்டிருந்திருக்கலாம்
பழைய பாட்டு கேட்டுத்
தலையசைத்திருக்கலாம்
சற்று தள்ளி பதட்டமான ஒரு
சக பயணியைக் கவனித்திருக்கலாம்
மேலும்
ஸ்தம்பித்துப் போயிருக்கலாம்
வெடித்துச் சிதறும் முன்.
** மறைந்த [ மறைக்கப்பட்ட ] இன்ஃபோசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன் அவர்களின் அஞ்சலியாக எழுதியது.
Be First to Comment