Skip to content

சார்ந்து இருத்தல்

பெரிய மாட்டின்
வளைந்த கொம்பு மேல்
சிறு குருவியின்
ஆடியபடி செல்லும் பயணம்
வெய்யிலுக்கு வாய் திறந்து
கிடக்கும் முதலையின்
பல்லிடுக்கைக் கொத்தும்
சிறு பறவை
சன்னமான ஒலியில்
பழைய பாடல்
பார்க்கும் பெரியவரின்
கழுத்தைக் கட்டி
சிறிய வாய் திறந்து
வெறும் பனியனோடு
தூங்கும் குழந்தை.
Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: