அலை அலையான சீலை
உயர்வதற்கு முன்
வெள்ளைத்திரையை
வெறித்திருக்கும் நேரம்
பிசின் தடவி சைக்கிள் ட்யூப்
காயும் நேரம்
வாரப் பத்திரிகைக்கு
உங்களுக்கப்புறம் நானெனக் கூறி
கலைக்கதிர் மேயும் நேரம்
தேர்வெழுதத் துணிந்தும்
வினாத்தாள் கையில் வர
மார்ஜின் போட்டுக்கொண்டிருக்கும் நேரம்
டாக்டர் வரும் வரை
மருந்து விளம்பரங்கள்
படிக்கும் நேரம்
படத்திற்கு முன்பாக
லோக்சபா, ராஜ்யசபா செய்திகள்
கடக்கும் நேரம்
மனம் வேகமாகவும்
கணம் சாவகசமாகவும்
நகரும் தருணங்கள்
அருமை.. எல்லோரும் கடக்கும் நேரங்கள் ….
அன்பின் டோடோ – காயும் நேரங்கள் – காத்திருக்கும் நேரங்கள் – மன வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாத தருணங்கள் மெதுவாக நகரும் பொழுது – நாம் படும் பாடு …… நல்ல கற்பனை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
நகராமல் கனக்கும் கணங்களைக் கனகச்சிதமாகக் கவிதையாக்கிய விரல்களுக்கும் மனதுக்கும் ஒரு சபாஷ்.
இராமசாமி,சீனா,சுந்தர்ஜி.. வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றி.
காத்திருத்தல் பழமாகும் காயாய்,
கடந்துவிட்டால் அழுகும் பழமாய்
எல்லாம் காலம் தான்.
என் தமிழ் உங்கள் கற்பனை வளத்தின் முன் தலைகுனிந்து நிற்கிறது.
சிவா ஸார்.. தலைகுனிவது வேண்டாங்க.. நான் ஒரு சக பயணி. அவ்வளவே.. உங்க வருகைக்கும் வாசிப்பிற்கும் ரொம்ப நன்றி.
Nice