தன் வாகனமோ வாசலில்
கல்லாகிக் கிடக்க
உமையவள் சன்னதியோ
குளம் தாண்டி இருக்க
வாழ்வளிக்கும் ஈசன்
வசிப்பதென்னவோ
வழி தெரியாமல் பறக்கும்
வவ்வால்களுக்கு நடுவே !
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment