உதடுகள் வேர்க்காததின்
ஆதி ரகசியம்,
ஆணின் மீசையும்,
பெண்ணின் ஆசையும்
குழையும் காரணம்
இதழ்களின் ரேகையிலும்
பார்க்கப்படும் ஜோசியம்
மொழியில் வராத சத்தம்
அது
இதழ்கள் உரசி உருவான
வெட்கச் சூரியனின்
வெளிச்சத்தில் கண்கள்
மூட வைக்கும்
முத்தம்.
Be First to Comment