நொடித்து மூடிய
டயர் கம்பெனியின்
அச்சடித்த விலாச அட்டையில்
பெயருக்கு அடியில்
“பூ வியாபாரம்” மற்றும்
“தொலைபேசி எண்”
பேனாவில் எழுதிய
வரிகளில் தெரிந்தது
ஒரு தொழிலாளி வியாபாரி
ஆனதொரு வாழ்வும்
புகை போக்காத கூண்டின்
ரப்பர் தீய்ந்த வாசனையும்
Be First to Comment