நிலவில்லாத இரவில்
கடேசி பஸ்சோடு
வெளிச்சம் தொலைத்த
ஒரு வழிச்சாலை..
கைபேசியில் பழைய
பாட்டு ஒலித்தபடி போன
டயர் வைத்த
மாட்டுவண்டியின் பின்னே
எல்.இ.டி. ஒளி உமிழும்
லாந்தர் வடிவ
விளக்கில் விடாமல் முட்டிக்
கொள்ளும் மின்மினிகள்
லாந்தர் தீயின் நிறம்
வெள்ளையான
குழப்பத்தில்.
Be First to Comment