ஏதோ ஒரு கறி
கடிக்கும் உணவு
சிமெண்ட் தொட்டியில்
குடிக்கும் நீர்
வைக்கோல் மெத்தை
படுக்கும் உறைவிடம்
தீ வட்டத்துக்குள் அனல் பட
பிடிக்காமல்
குதிக்கும் வேலை
என
காலம் தள்ளியது
கானகம் மறந்த
கூண்டுப் புலி,
மாத சம்பளத்துக்கு.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
Be First to Comment