Skip to content

சின்ன‌ த‌ழும்பு

வெயிலுக்காக‌
அம்மாவின் கால்க‌ளில்
நின்ற‌து

ப‌ள்ளி மைதான‌த்தில்
மேக‌த்தின் நிழ‌லைத்
துர‌த்திய‌து

ம‌ழை நீர் வாய்க்காலில்
சைக்கிள் க‌ழுவிய‌து

முத‌ல்முறை த‌னியே
டிக்க‌ட் வாங்கி
தாய்வீடு ப‌ட‌ம் பார்த்த‌து

காசை தொட்டுப்பார்த்துக்கொண்டே
சேட் க‌டையில் டீ சாப்பிட்ட‌து

நினைவில் சின்ன‌ த‌ழும்பாய்..

ப‌ழ‌த்தில் வ‌த்தி
செருகிய‌ த‌ட‌த்தைப் போல‌.

Published inக‌விதை

3 Comments

  1. அற்புதமான தருணங்கள்.அது வந்து முடிந்த இடத்தின் உவமை எல்லாவற்ரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது.நறுமணம் காற்றில் கலந்திருக்க அது இருந்த இடமென்று சொல்ல இருக்கும் ஒரே அடையாளம் பழத்தில் செருகிய இடம் மட்டுமே.

    சபாஷ் டோடோ. உங்களை இப்படியே கூப்பிடலாமா?

  2. /ப‌ழ‌த்தில் வ‌த்தி
    செருகிய‌ த‌ட‌த்தைப் போல‌. /

    ‘ப‌ழைய‌’ நினைவுத் தழும்புக்கு இந்த‌ உவமை?
    சிமிண்டில் ப‌திந்த‌ த‌ட‌மாய், ப‌ள்ளி டெஸ்கில் கீறிய‌ பெய‌ராய்?

  3. வாச‌ன்,சுந்த‌ர்ஜி.. வ‌ருகைக்கும் வாசிப்பிற்கும் ந‌ன்றி.

    அந்த‌ உவ‌மை ‘ப‌ழைய‌’ அல்ல‌ ‘சின்ன‌’ த‌ழும்புக்காக‌

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: