செய்தவருக்கு
செய்கூலி
கைக்கு
வரவில்லையென்றாலும்
பாதி நாட்கள்
மண் அடுப்பில்
பூனைகள்
படுத்திருந்தாலும்
மடித்து செருகப்பட்ட
எரவாணத்து
லாட்டரி சீட்டுகளில்
மட்டும் சிரித்துக்கொண்டிருந்தாள்
அதிர்ஷ்டம் தரும்
வேறு மாநிலத்து
அஷ்டலஷ்மி.
நல்ல பார்வை.தொடர்ந்து எழுதுங்க.இன்னும் மொழியின் பிடி இறுகும்.