சிங்கத்தின் தலை போன்ற
வைக்கோல் லாரி
இடுப்பில் முள் ஜரிகை
வைத்த கரும்பு டிராக்டர்
தும்பி போன்ற
ஊராட்சி வண்டி
பல்லில்லாத ரேடியேட்டர்
தெரியும் வி.எம். பஸ்
ஈ என்று சிரிக்கும்
பாலவிநாயகர் பஸ்
மூக்கு வைத்த
மண்ணு லாரி
வண்டி மீது
அனுமார் பறந்தபடி
போன ஏபிடி வண்டி
வண்டிகளிலும், மேகங்களிலும்
உருவங்கள் பார்த்த காலம் அது.
u r second to none in bringing back nostolgic memories of my childhood.sure.
சுவாரஸ்யமான பதிவு.உங்களின் தேசிய நெடுஞ்சாலையால் கவரப்பட்டு இங்கே வந்தேன்.
எல்லாவற்றையும் காட்சி வழிப் பார்க்கும் போது இந்தக் கவிதைகள் பிறக்கின்றன.
அடிக்கடி வருவேன்.
நன்றி ராஜன். வருகைக்கு நன்றி + மகிழ்ச்சி சுந்தர்ஜி. கண்டிப்பாக வரவும்.