அதிகாலை டியுஷனில் பேசி
பள்ளிக்கு போகும் வழியில்
சைக்கிளில் பேசி
எல்லா வகுப்பிலும் பேசி
பரிட்சையிலும் பேசி [ சைட்ல வைடா ! ]
கிரவுண்டில் பேசி
தியேட்டரில் பேசி
நடுராத்திரி சைக்கிளைத்
தள்ளிக்கொண்டே பேசி
பேச்சை இறைத்துவிட்டோம்.
பல வருடம் கழித்து
குடும்பம் ஆன பின்
இப்போதெல்லாம்
போனில் அழைத்தவுடன்
ஹலோ கூட சொல்லாமல்
கேட்கிறான், பழைய நண்பன்..
“சொல்டா.. அப்புறம் ?!”.
என்னங்க…. கிருஷ்ணாவே பேச மாடேங்கறாரு….நீங்க வேற…
நன்று.:-))))))
வெங்கட், ஸ்ரீ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. அப்புறம்னு சொல்லிட்டா எனக்கு மறுபேச்சே வராது