மதியம் மூன்று மணிக்கு
கல்யாண மண்டபத்தில்
சேர்கள் அடுக்கி,
அட்சதை அரிசி
பெருக்கும் போது
இரண்டாவது ஆட்டம்
முடிந்து கடைசி ஆளாய்
வண்டியை எடுக்கும்போது
முள் செடியும்
புதரும் மறைத்த
பழைய ராஜலக்ஷ்மி
தியேட்டரைப்
பார்க்கும்போது
ஏற்படுவது.
மனதை உலுக்கும் கணங்கள். நெகிழ்ச்சி.
நன்றி சுந்தர்ஜி..
முன் ஆறிருந்தயிடத்தில், வெறும் கருவேலமரங்கள்,
தொடர்பு தொலைத்து நித்தமும் நினைவோடிருந்த
கல்லூரி நண்பனின் மரணச் செய்தி யாரிடமிருந்தோ,
காலம் கடந்து.