வேலை முடிஞ்சு வந்தப்புறம்
பாட்டு கேட்பீங்களா ?
எப்பவாச்சும்
படம் ?
எப்பவாச்சும்
வரையறது, கோலம், கோயில்?
கம்மிதான்
புஸ்தகம் ?
கொஞ்சம் தான்
பொழுது போக்கே இல்லையா ?
தன் பெயர் மட்டும் வைத்து
வித விதமான கல்யாண
பத்திரிகைகள் செய்வதை
மறைத்து சொன்னாள்
வயர் கூடை
பின்னுவேங்க.
முதிர் கன்னியின் முரண்.
விதிர் ரணங்களிடம் சரண்.
Touchy