பள்ளம் நோக்கிப்
பாய்ந்து
பெரும்பரப்பில்
சுழன்று
பாலத்தின் கண்களில்
நுழைந்து
எப்படியெல்லாமோ
அலைந்து
விரிந்த வானம் தெரிய, மண்
சரிந்த உப்புக் கடலில்
சேரும்போது
திகைத்து நின்றது
நதி,
மாநகரத்தில்
இறங்கி விலாசம்
விசாரித்த என் முதல்
நாளைப் போலவே
Be First to Comment