தொடர்ந்தெரியும் சூரியனுக்கு
பூதக்கண்ணாடி வைத்து ஆடிய
சிறுமியைப் பிடித்துப்போனது
கண்ணாடியின் வழியே
தன் பேரொளி சுருக்கி
சின்ன வெள்ளைப் பொட்டாகி
ஒற்றை ஒளியாகி, தன்
நூற்றாண்டு காலப் பழக்கத்தில்
கீழே கிடந்த காகிதத்தை
எரித்த து
பின்னர் பெய்த
பெருமழையில்
கீழே கிடந்த
பூதக்கண்ணாடியில்
தேங்கியிருந்தது
தன்னைச் சுருக்காத
மழை நீர் !
Be First to Comment