கோயில் மண்டபத்தில்
காலை 7 மணி வெய்யில்
சாய்வாக விழுந்ததைப் போல
மெழுகிய இளம்பச்சை
பசுஞ்சாணத்தில்
வெள்ளை மாவுக்கோலம்
போல
மழை முடிந்து நனைந்திருந்த
பன்னீர் மல்லியைப் போல
கருநீலத் தாவணியில்
மகாலஷ்மி டாலரைப் போல
பளிச்செனப் பதிந்தாய்
முதல்நாள் பார்வையில்.
இருண்டவானில் கண் சிமிட்டும் ஒற்றை நட்சத்திரமாய், உங்கள் கவிதை.