Skip to content

இய‌ல்பாக‌

புள்ளி வைத்து க‌ம்பிக்கோல‌ம்
போடுவ‌தை போல‌


பாட‌ம் ப‌டித்த‌ப‌டி நெருக்க‌மாக‌
ம‌ல்லிப்பூ க‌ட்டுவ‌தைப்போல‌


நெயில்பாலிஷ் வைத்து
ஊதிவிடுவ‌தைப் போல‌


க‌ண்ணாடியில் பார்க்காம‌லே
கம்ம‌ல் மாற்றுவ‌தைப் போல‌


நெற்றிப் பொட்டை க‌ண்ணாடியில்
ஒட்டுவ‌தைபோல‌

விர‌லில் அதிக‌மான‌
மையை முடியில்
த‌ட‌வுவ‌து போல‌

எவ்வ‌ள‌வு இய‌ல்பாக‌ சொன்னாய்
உன‌க்கு திரும‌ண‌ம்
நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌‌தை.

Published inக‌விதை

3 Comments

  1. //நெயில்பாலிஷ் வைத்து
    ஊதிவிடுவ‌தைப் போல‌//
    :)
    Nice..

  2. ந‌ன்றி க‌னிமொழி.

Leave a Reply to Nags Cancel reply

%d bloggers like this: