வானம் தெரியாதெனக்கு
குளமும், ஏரியும் தெரியாதெனக்கு
மரமும், குளிர் மழையும்
தெரியாதெனக்கு
மழையும், கனிய ஆரம்பிக்கும்
பழமும் தெரியாதெனக்கு
அடுக்கி வைத்த
ஃபைல் அட்டைகளை
கலைக்கும் வேலை செய்து
முதல் வார
சம்பள நெல்லுக்கு
வாழும் எனக்கு
சிறகுண்டு,
இருந்தும்
பறக்கத் தெரியாதெனக்கு
Be First to Comment