குழந்தைக்காக காந்தம்
வாங்க அலைந்தபோது
மினா ரிக்கார்டிங் கடையில்
பழைய ஸ்பீக்கரில்
காந்தம் கிடைத்தது
குழந்தைக்காகவென தெரிந்ததும்
காசு மறுக்கப்பட்டது
மண்ணுல பெரட்டிட்டு
பேப்பர்ல வச்சு பேய்
காட்டுங்க ஸார் என
ஆர்வமாக சொன்ன போது
அவரின் கண்களில்
தாடி, மீசை மறைந்து
சில்க் ஹவுஸ் கைப்பையோடு
6 ஆ பிரிவு மாணவன்
தற்காலிகமாக வந்து..
மறைந்து போனான்.
தற்காலிகமாக வந்து..
Published inகவிதை
Toto,
Liked this one. Only today when I was reading all these again, I understood. Thanks’