Skip to content

ஏஜ‌ண்ட் அமாவாசை

க‌ன்னுக்குட்டி 2 நிமிஷ‌ம்
குடித்த‌து போக‌
மீதியெல்லாம் க‌ற‌ந்து
டிப்போவில் விற்கும்
அமாவாசையை
மாடுக‌ள்
ஒன்றும் செய்வ‌தில்லை

குடும்ப‌த்திற்கு கொஞ்ச‌மும்
ஏஜ‌ண்டிற்கு அதிக‌மும்
கொடுத்து வாழும்
வெளிநாட்டில்
வேலை செய்வோரைப் போல‌..

Published inக‌விதை

3 Comments

  1. அன்பின் டோடோ

    சிந்தனை அருமை – ஆதங்கம் புரிகிறது – அயலகத்தில் ஏஜண்டின் மூலம் அலுவலில் இருப்பவர்கள் படும் பாடு ……

    எடுத்துக்காட்டு – ஒப்பு நோக்குவது அருமை

    நல்வாழ்த்துகள் டோடோ
    நட்புடன் சீனா

  2. எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்..ஆனா உங்க comparison ரொம்ப ஷார்ப்…,
    seriousness உடனே புரிய வெய்க்குது

  3. ராஜ‌ன், சீனா.. ரொம்ப‌ ந‌ன்றிங்க‌

%d bloggers like this: