பக்திப்பெருக்கும்,
ஆலயத்திருப்பணிகளும்
அதிகமாகிவிட்ட
இந்நாட்களில், ஓர் இரவில் ..
கல் மண்டபத்தூண்களும்,
அரச மரமும்
மூலவருடன்
பேசிகொண்டிருந்தன..
” கோயில் முழுதும்
சலவைக்கல்லும்,
கிரானைட்டுமாக
ஆகிடுச்சுங்க..
தகிடு அடிக்காம,
டைல்ஸ் ஒட்டாம
பாக்கி இருக்கறது
நாங்களும், நீங்களும்
மட்டும்தாங்க ” .
அன்பின் டோடோ
தவிர்க்க இயலாத மாற்றங்கள் – வரத்தான் செய்யும் – மூலவரையும் மாற்றி விடுவார்கள்.
இரவில் அரச மரமும் தூண்களும் பேச்சுத் துணைக்காக கூட இருக்கும் மூலவருடன் பேசும் கற்பனை அருமை
நல்வாழ்த்துகள் டோடோ
நட்புடன் சீனா
நல்ல கற்பனை டோட்டோ….
நல்ல கற்பனை.. கலக்கிட்டீங்க
வெங்கட், ராஜன், சீனா.. வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி.