ஊர்ல
மெட்ராஸ் வண்டி போனால்
காலையில் ஆறு
வி.எம். போனால்
ஒன்பது
அன்னை சத்யா போனால்
பத்து
தாதா பஸ் போனால்
பன்னிரெண்டு
மீன் வண்டி வந்தால்
நாலேகால்
சுந்தர விநாயகர் வந்தால்
அஞ்சரை
சங்கு புடிச்சா
ராத்திரி ஒன்பது
இங்க எப்பொழுதுமே
நைட் ஷிஃப்ட்டு
பகல்
நேரமே தெரிவதில்லை.