நீர் கோர்த்த ஈரக் கோணிகள்
தசை துடிக்க பாதி நனைந்த
மாடுகள்
குண்டு பல்புக்குள் தேங்கிய நீர்
இன்னும் நிறம் பிரகாசமான
காய்கறிகள்
நீரில் மிதக்கும் அரைவட்ட
வெங்காயச் சருகுப் படகுகள்
தகர ஷெட்டில் தாளமாய்
சப்தம்
முழுதும் நனைந்த பரஸ்பர
ஈரச் சிரிப்புகள்
நேரம் கடந்தாலும்,
சட்டை நனைந்தாலும்
மேலும் மின்னினாலும்
மயங்கி வேடிக்கை பார்த்து
மாளாது
மார்க்கெட் மழை !