இந்த மணமேடையில்தான்
பூந்தோட்டக்காவல்காரன்
கிளைமாக்ஸ்
நடந்ததாக சொன்னேன்.
வெளியூர் மாப்பிள்ளைக்கு
புரியவில்லை.
மகாலட்சுமி மஹாலில்
முன்பு
தினசரி 4 காட்சிகள்
நடந்தது அவருக்கு
தெரிந்திருக்க
நியாயமில்லை.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
இந்த மணமேடையில்தான்
பூந்தோட்டக்காவல்காரன்
கிளைமாக்ஸ்
நடந்ததாக சொன்னேன்.
வெளியூர் மாப்பிள்ளைக்கு
புரியவில்லை.
மகாலட்சுமி மஹாலில்
முன்பு
தினசரி 4 காட்சிகள்
நடந்தது அவருக்கு
தெரிந்திருக்க
நியாயமில்லை.
காலில்லாத நூலகருக்கு
உதவியாக இருப்போம்
வாரமலர் குறுக்கெழுத்து
சேர்ந்து எழுதுவோம்
யாருக்கும் அனுமதியில்லாத
அட்லஸ் புத்தகம்
பார்ப்போம்
சில சமயம் நட்பாகவும்
சில சமயம் கோபமாகவும்
இருப்பார்
இருந்தும் அந்த நட்பு
தொடர்ந்துகொண்டிருந்தது
பிய்ந்து போன
நூலகப்பதிவேட்டில்
கட்டிய
பென்ஸிலைப்போல்.
தும்மலுக்கு
நூறு, இரனூறு
என்றும்
நெட்டி முறித்து
திமிர்
விட்டுக்கொண்டும்
கொட்டாவி வந்தால்
அடி செருப்பால
என்று சொல்லி
மூதேவியை
துரத்திக்கொண்டும்
இருந்தோம், ஊரில்
இப்போது பணிநிமித்தமாக
ப்ளெஸ் யூ என்றும்
எக்ஸ்க்யுஸ் மீ என்றும்
மாற்றிக்கொண்டோம்.
கடலை நேரம்
பண்பலை நிகழ்ச்சிக்கு
தொலைபேசி
அழைப்பு வந்தது
பழகிய பெண்
மாசமாகிவிட்டதாகவும்
கருவை
என்ன செய்வதென்று
தெரியாமல்
குழம்புவதாகவும்
சொன்னானொருவன்
கலவரமாகி அழைப்பைத்
துண்டித்த அந்த
இளம் தொகுப்பாளினி
அடுத்த பாட்டை
ஒலிபரப்பினாள்
யாருக்கும் டெடிகேட்
செய்யாமல்.