Skip to content

Date archive for: January 2010

ஒரு குடும்ப‌த்து ம‌ர‌ங்க‌ள்

ஓலையில் முள்குத்தி
காற்றாடி செய்ய‌ முடியாது..


ப‌ன‌ங்காய் ட‌ய‌ர் வைத்து
வ‌ண்டி செய்ய‌ முடியாது..


ப‌ச்சைஓலையின்
வாச‌னை வ‌ராது..


ப‌த‌னியோ, க‌ள்ளும்கூட‌
இருக்காது..


இத்த‌னையும் த‌ரும்
ப‌னைம‌ர‌ங்க‌ள்
ஏரிக்க‌ரைக‌ளிலும்,
இவை ஏதும் த‌ராத‌
அதே குடும்ப‌த்து
பாக்கும‌ர‌ம்
பார்க் ஹோட்ட‌ல்க‌ளிலும்
காண‌ப்ப‌டுகிற‌து.

அவ‌ர‌வ‌ர் பிர‌ச்னை

மாற்ற‌லில் வ‌ந்த‌தால்
க‌ட‌ன் குறைந்த‌தென்று
கணவ‌ன்
ச‌ந்தோஷ‌ப்பட‌..


புது ஊரில்
துணி காய்வ‌த‌ற்கு
வெயில் இல்லையென‌
ம‌னைவியும்


ப‌ழைய‌ ப‌லூன்கார‌னும்,
ஐஸ்வ‌ண்டிக்கார‌னும்
வ‌ர‌மாட்டார்க‌ளே என
குழ‌ந்தையும்
க‌வ‌லைப்ப‌ட்ட‌ன‌ர்.

செப்பு பாய்ல‌ர்

ச‌வுக்கு க‌ட்டையும்
க‌ரியும் அதன்
உண‌வு


சைக்கிள் க்ரான்க்கும்
இரும்பு முக்காலியும்
அதன் இத‌ர‌ பாக‌ங்க‌ள்


அண்டைவீட்டு
பெரும்பகை வர
வ‌ழிவ‌குக்கும்
அதன் கரும்புகை


தற்போது
ஓய்வில் இருக்கிற‌து,
ர‌யில்வே ஆபீஸ்
வாச‌லில் இருக்கும்
நீராவி இஞ்சினைப்
போல்.

சுத்த‌ம் சுகாதார‌ம்

ந‌ன்றாக‌
மென்று த‌ந்த‌
வெற்றிலை


எலும்பில்
உறிஞ்சி எடுத்த‌
ம‌ஜ்ஜை


க‌டித்துப்
ப‌ங்கிட்ட‌
க‌ட‌லையுருண்டை


பாதி முடித்த‌பின்
த‌ந்த‌
பால் ஐஸ்


குடும்ப‌த்திலும்,
ந‌ட்பிலும்
நெருக்க‌மாக‌
இருந்த‌
பொழுதுக‌ள் அவை.

%d bloggers like this: