கேள்விப்பட்டேன்,
நல்ல ப்லாட்டாம்..
ராயப்பேட்டை,
மைலாப்பூர்,
எக்மோர் என்று
நகரத்தில் கிடைக்கலாம்,
கிடைத்தாலும்
விலை பலமடங்கு அதிகம்
ஊருக்கு வெளியே என்றால்
தரமிருக்குமா
சொல்ல முடியாது
தாமதிப்பதும் முடியாது
நிறைய கேட்டாகிவிட்டது
ரொம்ப யோசித்து
அங்கே இங்கே என்று
காசை எப்படியோ
பிரட்டி
உதயத்தில்
பார்த்துவிட்டேன்
நல்ல ப்லாட்டுடன்,
புதிதாக வந்த
திரைப்படத்தை.