ஓட்டு எண்ணிக்கையில்
ஆட்சி மாற்றம் பற்றிய
செய்திகளின்போது
பெரியவர்களும்
காட்சி மாற்றம் செய்து
நடுநடுவே போடப்படும்
ஜெய்சங்கர்
படத்தின்போது
சிறுவர்களும்
ஆர்வங்களை
இடம் மாற்றிக்கொண்டோம்.
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
ஓட்டு எண்ணிக்கையில்
ஆட்சி மாற்றம் பற்றிய
செய்திகளின்போது
பெரியவர்களும்
காட்சி மாற்றம் செய்து
நடுநடுவே போடப்படும்
ஜெய்சங்கர்
படத்தின்போது
சிறுவர்களும்
ஆர்வங்களை
இடம் மாற்றிக்கொண்டோம்.
சொத்துக் கண்காட்சியிலேயே
அடுக்குமாடி குடியிருப்புகளை
உடனுக்குடன்
முன்பதிவு
செய்துவிடுகிறார்களாம்.
வங்கியுதவியும் அங்கேயே
கிடைக்கிறதாம்..
இதற்கு மேலும்
தள்ளிப்போட முடியாது..
நாளை நீ என்ன செய்தாயெனக்
குழந்தை கேட்கக்கூடும்..
அடுத்த வருடம்
எப்படியிருக்குமோ
சொல்ல முடியாது..
அவர்கள்
தீவுத்திடலை வாங்கிவிடுவதற்குள்
குழந்தையோடு
போய் வரவேண்டும்,
சுற்றுலாப் பொருட்காட்சிக்கு.
பல ஜோடிக்கால்களும்,
சில்க் ஹவுஸ் துணிப்பைகளும்,
காக்கி, வெள்ளை
சீருடைகளும்,
புழுதியுமாய் ஒரு
கலவரம் நடக்கும்
சம்பளம் சரியாகக்
கிடைக்காத கோபத்தை
அமைப்பாளர் மரத்தில்
ஒடித்த குச்சியில்
காட்டிடுவார்
அடிவாங்கியும்
சிரிப்புடன் ஓடி வருவார்கள்
செவிக்குணவில்லாத
இடைவேளையில்
ஈயப்பட்ட சத்துணவுடன்
கிடைத்த
முட்டையோடு.
எந்தப் பள்ளி வேனும்
பள்ளத்தில் கவிழவில்லை
எந்த லீலை சாமியாரும்
சிக்கவில்லை
எந்த நடிகரும் சவால்
விடவில்லை
பந்த்தில்லை, கலவரமில்லை,
துப்பாக்கிச்சூடில்லை,
அட.. ஒரு மதயானை கூட
மார்க்கெட்டில் யாரையும்
மிதிக்கவில்லை
இதெல்லாம் ஒரு
தலைப்புச்செய்தி !!
சரி..காத்திருப்போம்.
சற்று முன் கிடைக்கப்போகும்
திடுக்கிடும்
தகவலுக்காவது..