Skip to content

Date archive for: March 2010

க‌ற்ற‌தும் விட்ட‌தும்

இட‌து ப‌க்க‌ம் கைக்குட்டை வைக்க‌,
வ‌ல‌து ப‌க்க‌ம் ப‌ர்ஸ் வைக்க‌,
அதிக‌ ப‌ண‌த்தை
டிக் பாக்க‌ட்டில் வைக்க‌,
கை வைத்த‌ ப‌னிய‌ன் போட‌,
சிவாஜி, க‌ம‌ல், சுஜாதா ர‌சிக்க‌,
துப்ப‌றியாத‌ வார‌ப் ப‌த்திரிகை ப‌டிக்க‌,
முக‌ச்ச‌வ‌ர‌ம் செய்து அத‌ன் பின்
படிகார‌ம் போட்டுக்கொள்ள‌,
கூட்ட‌மில்லாத‌ க‌டையில் துணியெடுக்க‌,
இஸ்திரி ப‌ண்ண‌,
சுத்த‌மாக‌ இருக்க‌,
குழ‌ந்தைக‌ளைக் கொஞ்ச‌,

எல்லாம் பார்த்தே க‌ற்றுக்கொண்டேன்
அப்பாவிட‌ம்,
ஒன்றைத் த‌விர‌..

இருப்ப‌தைக் கொண்டு
திருப்தியாக‌ வாழ.

மெதுவாக‌

நீயாவ‌து ப‌டிச்சிட்டியாடா ?
நேத்தெல்லாம் க‌ர‌ண்டே இல்லைடா !
இன்னைக்காடா சொன்னாங்க‌ ?!
என் நோட்டே காண‌ன்டா !
உன‌க்கு ரைட்ல‌ நானு..
ஸார் லீவ் போட்டிருந்தார்னா..

உரையாட‌ல்க‌ள் ஊடாக‌
தேர்வு ப‌ய‌ம் மெதுவாக‌
வில‌க‌த் தொட‌ங்கும்..

அலைக‌ள், ப‌ற‌வைக‌ள்
ச‌த்த‌த்தின் ஊடாக‌
மெதுவாக‌ பொழுது விடிவ‌து
போல்.

வெளிநாட்டிலிருந்து

வெளிநாட்டிலிருந்தோ
வெளியூரிலிருந்தோ
வீட்டிலுள்ள‌வ‌ர்க‌ளோடு
பேசும்போது

அவர்க‌ளின்
குரலையும் மீறி,
ஒரு முனையில் தெரியும்
க‌வ‌லைக‌ள்
ம‌று முனையில் ஏற்ப‌டுத்தும்
திவ‌லைக‌ள்.

ஈர‌ விற‌கில்,
ஒரு முனையில் எரியும்
நெருப்பு,
ம‌று முனையில்
பூக்க‌ வைக்கும்
நீர்த்துளிக‌ளைப் போல்.

புல‌ம் பெய‌ல் நீரில் நாக‌ப்ப‌ழ‌ம்

புல‌ம் பெய‌ல் நீர் ப‌ற்றி
த‌மிழ் ம‌ன்ற‌க் கூட்ட‌த்தில்
பேசிக்கொண்டிருந்தார்

எங்க‌ளுக்காக‌ எங்க‌ள்
மொழியில்

ந‌ம்ம‌ நாக்கு
சேமியா ஐஸ் சாப்டா
சிவ‌ப்பாவும்
நாக‌ப்ப‌ழ‌ம் சாப்டா
க‌த்திரிப்பூ நிற‌மாக‌வும்
மாறுதுல்ல‌
அந்த‌ மாதிரியென்று
சொந்த‌ உரையிய‌ற்றினார்
அர‌ங்க‌நாத‌ன் ஐயா !

%d bloggers like this: