வன்முறை
பலவகை இருந்தாலும்
நான் நடுங்குவது
அழும் சிறுவனை மிரட்டி
வாய் மூடித்
தேம்ப வைக்கும்
அதட்டலுக்கும்
மதில் சுவரில்
குத்திய
கண்ணாடித் துண்டுகளுக்கும்
குழந்தையை
அடிக்கும்போது
கேட்கும் கண்ணாடி
வளையல் சத்தத்திற்கும்
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
வன்முறை
பலவகை இருந்தாலும்
நான் நடுங்குவது
அழும் சிறுவனை மிரட்டி
வாய் மூடித்
தேம்ப வைக்கும்
அதட்டலுக்கும்
மதில் சுவரில்
குத்திய
கண்ணாடித் துண்டுகளுக்கும்
குழந்தையை
அடிக்கும்போது
கேட்கும் கண்ணாடி
வளையல் சத்தத்திற்கும்
வரும்போது குடுங்கனு சொல்ல
செருப்பு டோக்கன்காரரில்லை
தட்டு வாங்கிக்கயணானு சொல்ல
பூக்காரியில்லை
கரித்துண்டுக் கல்வெட்டோடு
பாழடைந்த நூறுகால் மண்டபமில்லை
நீலப் பெயிண்ட்டில், ஆதிகாலத்தில்
எனத் தொடங்கும்
ஸ்தல வரலாறில்லை
கத்தினால் எதிரொலிக்கும்,
வவ்வால் பறக்கும்
பிரகாரமில்லை
அடிக்கும் வெய்யிலில்
இருட்டாகத் தெரியும்
கருவறையில்லை
பத்து ரூபாய் சிறப்பு வழி
வரிசையுமில்லை
மின்விளக்கிலும், மின்விசிறியிலும்
உபயதாரர் பெயரில்லை
துர்க்கைக்கு கவிழ்த்து வைத்த
எலுமிச்சை விளக்கில்லை
கொடிமரத்தருகே சுற்றும்
மாடும் நாயுமில்லை
கோடு போட்ட ஜமக்காளம் விரித்து
சுற்றமும் நட்பும் சூழ யாரும்
சோறு சாப்பிடவில்லை
தட்டில் போட்ட நோட்டைக்கூட
உண்டியலில் போட்டு
அமைதியாகப் போகிறார்
அந்தவூர் அர்ச்சகர்
என்ன கோயிலோ
என்ன நிர்வாகமோ.
தேன்மிட்டாய்,கமர்கட்,
மாங்கா பத்தை,புளியந்துளிர்,
கல்லுப்பு,
கொடுக்காப்புளி,தூள்பாக்கு,
மோர்மிளகா,
சுண்டைக்காய்
அறுசுவையோடு தின்று
அவர் சைக்கிளில் சுற்றி
ஆகாசவாணியில் செய்தி
வாசித்த சரோஜ் நாராயண்ஸ்வாமி
ஆண்தான் என்று நினைத்து
ப்ருஸ்லீக்கும் ஃபேந்தமிற்கும்
சண்டை வந்தால்
யார் ஜெயிப்பாரென்று
பந்தயம்கட்டி
பதினோரு மணிக்கு
மீன் வாங்கப் போகும்
அம்மாவைப் போல்..
சாவகசமாகத்
திரிந்த
நேரங்கள் அவை.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி
சொல்லும்
பட்டேன் படாத துயரம்
என்ற வரி,
தத்தோம் தளாங்கு தத்தோம்
* திரைப்பாடலுக்குப்
பொருந்தி வருவதைப்
பேசிச் சிரித்தோம்..
புத்தியோ பாட்டிலே
பாட்டுப் புத்தகம்
பையிலே.
* வெற்றி விழா