மழை பெய்த நாளில்
ரயில் பாதையருகே
சிவப்பு சட்டையில் ஒரு
சிறுவனைப் பார்த்தேன்..
ஏழாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில்
கொட்டும் மழையில்
சிவப்பு சட்டை காட்டி
ஓடும் ரயிலைக் காப்பாற்றிய
வளவனாக இருக்குமோயென
யோசித்தேன்..
இருக்காது..அவன் இந்நேரம்
வளர்ந்து வேலைக்குப்
போயிருப்பான் என்று
சிரித்துக்கொண்டேன்