Skip to content

Date archive for: April 2010

ஔர‌ங்கசீப்பின் உருவ‌ம்

ம‌க‌னுக்காக‌ வாங்கிய‌
வெள்ளை நிற‌
சென்ட் ர‌ப்ப‌ரில்


பால்ய‌த்தில்,
என் எண்ணைத்த‌லையில்
ர‌ப்ப‌ரைத் தேய்த்து
வ‌ர‌லாற்றுப் புத்த‌க‌த்தில்
வைத்து அழுத்தியெடுத்த‌
ஔர‌ங்கசீப்பின்
உருவ‌ம்


தோன்றி
ம‌றைந்த‌து.

இதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா

செய்தித்தாள் அட்டை கிழித்து
காக்கி அட்டை மாற்றி

ம‌ன‌ப்பாட‌ப் ப‌குதி
முழுதும் ப‌டித்து

புது ஜாமென்ட்ரி
பாக்ஸ் உறையோடு
வைத்து

புதிதாக‌ துணி தைத்து
ப‌குட‌ரில் விபூதி
வைத்து

சார்ட் பேப்ப‌ரில்
க்ளோரின் த‌யாரித்த‌ல்
வ‌ரைந்து

நான்கு பீரிய‌ட்
காத்திருந்துப்பின்
வ‌ந்த‌ டி.இ.ஓ.
வ‌குப்பில் நுழையாம‌லேயே
இதுதான் 8 ஏ‍ செக்ஷ‌னா
என்று ம‌ட்டும் கேட்டுவிட்டு
போன‌தில்

எங்க‌ளுக்கு
வ‌ருத்த‌ம் க‌ல‌ந்த‌
ச‌ந்தோஷ‌ம்.

த‌ன‌பால் த‌ட்ட‌ச்சுப் ப‌யில‌க‌ம்

வேலைக்கு எழுதிபோட்ட‌
இடைவெளியில் சில‌ பேர்

தாலுக்காபீஸ் வாச‌லில்
க‌டைபோட‌ சில‌ பேர்

எதையாவ‌து செய்ய‌ வேண்டிய‌
க‌ட்டாய‌த்திற்கு சில‌ பேர்

பெண்க‌ளைப் பார்த்து ம‌ட்டும்
போக‌ சில‌ பேர்

அவ‌ர்க‌ளின் கால‌மும், க‌னவும்

சுற்றும் ரிப்ப‌னிலும்,
சுருட்டிய‌ ப‌ழுப்புக் காகித‌த்திலும்,
ஆடும் வ‌ளைய‌ல் ச‌த்த‌திலும்,
கேரேஜ் பாரின் ம‌ணியோசையிலும்,
த‌வ‌றுக‌ள் சுழித்த‌ சிவ‌ப்பு மையிலுமாக‌
க‌ரைந்து கொண்டிருந்த‌ன‌

ஜ‌ன்ன‌ல் க‌ம்பியில்
ப‌க்க‌வாட்டில் மெதுவாக‌
ந‌க‌ரும் ம‌ழைத்துளியைப் போல‌.

அப்பாவின் நிழ‌லில்

ச‌ட்டையின் உள்ஜோபி போல்,
ப‌ள்ளிக்கு ரிக்ஷாவில் போன‌து போல்,
த‌ங்க‌ நாண‌லுக்குள்
செருகிய‌ செப்புக்குழாய் போல்,
நாயில்லாத‌ சாலையில்
போவ‌தைப் போல்,
பாதுகாப்பாக‌ உண‌ர்ந்த‌
த‌ருண‌ங்க‌ள்..

அப்பாவே மொத்த‌க் குடும்ப‌த்தையும்
பார்த்துக்கொள்ள‌

ந‌ட்பும், சிரிப்பும்,
ஃபுட்போர்ட் ப‌ய‌ண‌ங்க‌ளும்
ந‌ல்ல‌ சினிமாவுமாய்ப்
போன‌ நேர‌ங்க‌ள்.

%d bloggers like this: